செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு.............
மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் சாதனை மாணவர்கள், சமூக பற்றாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சமய தலைவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் இடம்பெற்றது.
மேல் மருவத்துதுர் ஆதி பராசக்தி வழிபாட்டு ஹரோ மன்ற அனுசரணையில் ஆதி பராசக்தி வழிபாட்டு ஹரோ மன்றம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கே.துரைராஜா, தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கல்வி பொது தராதர சாதாரணம் மற்றும் உயர் தரத்தில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் மடி கணனிகள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் மற்றும் கௌரவ அதிதிகளாக வைத்தியர் ஸ்ரீநாத், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்வில் இந்து ஆலய குருக்கள் மேல் மருவத்துவர் ஆதி பராசக்தி வழிபாட்டு ஹரோ மன்ற உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment