மட்டக்களப்பிலிருந்து சென்ற பேருந்தும், கொழும்பிலிருந்து வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.....

மட்டக்களப்பிலிருந்து சென்ற பேருந்தும், கொழும்பிலிருந்து வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.....

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற பேருந்தும் கொழும்பிலிருந்து திருகோணமலை வந்த பேருந்தும் குருநாகலில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்  சாரதி உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தும், கொழும்பிலிருந்து திருகோணமலை வந்த தனியார் பேருந்தும்  குருநாகல்  மெல்சிறிபுற பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலே இவ் விபத்து  சம்பவித்திருக்கிறது. அதிவேகமே விபத்துக்குக்காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை வேலை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,  பஸ் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதே வேளை பயணிகள் பலரும் காயமடைந்துள்ளனர்.



Comments