இந்துக்கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு...............

 இந்துக்கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு...............

மட்டக்களப்பு, இந்துக்கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வு இன்று (14) நடைபெற்றது.

புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. இந்துக்கல்லூரி அதிபர் கே.பகிரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் கே.லவகுமார், புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழக தலைவர் எம்.கெமில்டன் உட்பட புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள மாவட்ட, மாகாண, தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் நன்மை கருதி அவர்களுக்கான சீருடைகள் வழங்கப்பட்டன.






Comments