மட்டக்களப்பு பாடுமீன்பொழுதுபோக்கு கழகம்நடாத்தும் பத்மநாபாசவால் கிண்ண உதைபந்தாட்டதொடர்-2024...............
மட்டக்களப்பு பாடுமீன்பொழுதுபோக்கு கழகம்நடாத்தும் பத்மநாபாசவால் கிண்ண உதைபந்தாட்டதொடர்-2024...............
மட்டக்களப்பு பாடுமீன் பொழுதுபோக்கு கழகம் நடாத்தும் பத்மநாபா சவால் கிண்ண, விலகல் முறையிலான உதைபந்தாட்டத் தொடர் இம் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட உதைப் பந்தாட்ட சங்கத்தின் அனுமதியின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட உதைப் பந்தாட்ட கழக அணிகளும், படுவான்கரை உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட உதைப் பந்தாட்ட கழக அணிகளும், காத்தான்குடி உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகளுமாக 32 கழகங்கள் மோதவுள்ளன.
மட்டக்களப்பு பாடு மீன் பொழுதுபோக்கு கழகத்தின் தலைவர் D.செல்வராஜா தலைமையில் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட உதை பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் D.காந்தன், சுற்றுப் போட்டி தலைவர் உதய ராஜ், பத்மநாபா சவால் கிண்ணம் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான நிதி அனுசரணையாளர் யோகராஜா முருகவேல், பத்மநாபா மக்கள் முன்னணி பிரதிநிதி பிறவீந்த், பாடு மீன் பொழுதுபோக்கு கழக செயலாளர் கோபிராஜ் உட்பட கழகப் பிரதிநிதிகளும் இதில் பங்குகொண்டனர்.
Comments
Post a Comment