காத்தான்குடி கடற்கரையோரம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு.............

 காத்தான்குடி கடற்கரையோரம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு.............

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குள் அடங்கும் பாலமுனை கடற்கரையோரம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

(18) மதியம் 12 மணியளவில் பாலமுனை கடற்கரையோரம் கரை ஒதுங்கிய குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 55 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் எவ்வாறு மரணமானார் என்பது குறித்த விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments