சூரியா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு செயற்பாடுகள்...........
சூரியா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு செயற்பாடுகள்...........
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நடைபவனியும், சுயதொழில் உற்பத்தியாளர்களின் பொருட் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
சூரியா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு நகர் சிறுவர் பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு நடைபவனி, மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியூடாக கல்லடிப்பாலம் வரை பயணித்தது.
கல்லடிப் பாலத்திற்கு அருகே சுயதொழில் உற்பத்தியாளர்களின் பொருட்கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றதோடு, விழிப்புணர்வு தெருநாடகமும் நடைபெற்றது.
சூரியா பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பெருமளவானவர்கள் இந் நிகழ்வுகளில் பங்குபற்றினர்.
Comments
Post a Comment