மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் "மட்டு முயற்சியாண்மை - 2024" கண்காட்சி........

 மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் "மட்டு முயற்சியாண்மை - 2024" கண்காட்சி........

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் "மட்டு முயற்சியாண்மை 2024" எனும் தொனிப்பொருளில் விற்பனை கண்காட்சி இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு "மட்டு முயற்சியாண்மை 2024" எனும் தொனிப்பொருளில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சியை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.
குறித்த விற்பனை கண்காட்சியை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் பிரதேச செயலக வளாகத்தில் திறந்து வைத்துள்ளார்.
சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களான தேவகாந்தன் கிறிஸ்ணவேணி, ராஜு ஜசோதா மற்றும் யசோ ஆகியோரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இக் கண்காட்சியும் விற்பனையும் முன்னெடுக்கப்பட்டது.
கண்காட்சியில் சிறு தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், பெருமளவிலான வாடிக்கையாளர்கள் செயலகத்திற்கு வருகைதந்து ஆர்வத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்தமையினை காணக்கூடியதாக இருந்தது.




Comments