2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிசங்குடன் ஆலையக்குருக்கல் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது ........

2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிசங்குடன் ஆலையக்குருக்கல் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது ........

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலையம் ஒன்றில் சட்டவிரோதமாக வலம்புரிசங்களை வியாபாரத்தில் ஈடுபட்ட குருக்கல் ஒருவரை சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் (19) ஆலையத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முல்லத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய முல்லைத்தீவு விசேட அதிரடிப்படை முகாம் பெறுப்பதிகாரி தலைமையிலனா குழுவினர் சம்பவதினம்  குறித்த ஆலைய பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது வலம்புரிசங்குகளை விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அங்கு  கடமையாற்றிவரும் குருக்கலை மடக்கி பிடித்து கைது செய்ததுடன், சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிச் சங்குகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட 52 வயதுடைய குருக்கலையும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களையும் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Comments