காத்தான்குடியில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிதியுதவியில், கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன................

காத்தான்குடியில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிதியுதவியில், கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன................

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 166/A கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிதி உதவியுடன் 77 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்வழங்கி வைக்கப்பட்டன

பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் ரமீஸா ஜாபிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய\ஸ்ரீதர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவிகள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

ஒன்று தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரை கல்வி கற்கின்ற மாணவர்கள் 27 பேருக்கும் ஆறு தொடக்கம் 11 வரை கல்வி கற்கின்ற மாணவர்கள் 50 மாணவர்களுக்கு  பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Comments