CITY OF BATTICALOA - UK அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்திட்டம்......

 CITY OF BATTICALOA - UK அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்திட்டம்......

தற்கால சீரற்ற காலநிலையுடனான மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 56 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் CITY OF BATTICALOA - UK அமைப்பினரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களை இனங்கண்டு முதற்கட்டமாக 56 குடும்பங்களுக்கான உலருணவு பொருட்களை CITY OF BATTICALOA - UK அனுசரணையில், தாயக தன்னார்வலர்களின் உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தினுள் ஆரம்பிக்கப்பட்ட CITY OF BATTICALOA - UK அமைப்பானது தாயகத்தில் வாழும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments