மட்டக்களப்பு ஏறாவூரில் புதிய ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகள் ஆரம்பம்.............

 மட்டக்களப்பு ஏறாவூரில் புதிய ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகள் ஆரம்பம்.............

மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபையின் புதிய ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகள் (01) காலை செயலாளர் எம்.எம்.எம்.ஹமீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.

செயலாளரினால் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், புதிய ஆண்டில் நகரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

நகரசபை உத்தியோகத்தர்களுக்கான முதலாவது ஒன்றுகூடல் நிகழ்வும் நடைபெற்றது. சபையின் கணக்காளர் எம்.ஆர்.எப்.புஷ்ரா, நிர்வாக உத்தியோகத்தர் நபிறா ரசீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



Comments