போரதீவுப்பற்று வெல்லாவெளி சமுர்த்தி வங்கிக்கு புதிய நிர்வாகம் தெரிவு .....
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வெல்லாவெளி சமுர்த்தி வங்கியின் 2024ம் ஆண்டுக்கான வருடாந்த நிறைவேற்று கட்டுப்பாட்டுச்சபையின் புதிய நிர்வாக தெரிவுக்கான பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் குககுமரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இங்கு புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. இதில் தலைவராக லம்புஜாவும், செயலாளராக வங்கி முகாமையாளர் திருமதி யோகச்சந்திரனும், உபதலைவர் உசாந்தினியும், பொருளாளர் ரஞ்சினியும் தெரிவு செய்யப்பட்டனர்.
2023ம் ஆண்டில் வங்கியிலுள்ள முன்னேற்றங்கள், அதிகூடிய சேமிப்புக்கள் கடன்கள், லாபம் ஆகிய விடயங்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் செயல்பாடுகள் நடைமுறைகள் அஸ்வசும வேலைத்திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
Comments
Post a Comment