மட்டு இந்துக்கல்லூரியில் பாரிய சிரமதான பணி.......

 மட்டு இந்துக்கல்லூரியில் பாரிய சிரமதான பணி.......

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் (28) அன்று பாரிய சிரமதான பணி மேற் கொள்ளப்பட்டது. இந்துக்கல்லூரி மட்டக்களப்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அபிவிருத்தி சங்கம், அதிபர், ஆசிரியர் சமூகம், பெற்றோர் மற்றும் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றினைந்து இந்த சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

இப்பாடசாலையில் கல்வி கற்ற சகல மாணவர்களும் வயது வேறு\பாடுகளை களைத்தெறிந்து, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியை வயர்த்தெடுக்க வேண்டும் எனும் தூர நோக்கு சிந்தனையில் இம்முதல் பணி வெற்றியளித்துள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கின்றார்.

பாடசாலை முன் வளாகம் தொடக்கம் பின்புறம் மைதான வாயில் வரை இச்சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டது. எதிர்வரும் மாசி 05ம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்தையும் கருத்தில் கொண்டு இப்பாடசாலையின் வளாகம் துப்பரவு செய்யப்படுவதாக அதிபர் தன் கருத்தை தெரிவித்தார்.

இச்சிரமதான பணிக்கான புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் இலங்கையில் வாழும் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள் பல நிதியுதவியை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குறிப்பாக 2024ம் ஆண்டு புதிதாக பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மிகச்சிறப்பாக செயற்படுவதாக பலரும் தம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.









Comments