battimedia.lk ஊடகத்தின் ஒழுங்குபடுத்தலில் பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வழங்கி வைப்பு.....

battimedia.lk ஊடகத்தின் ஒழுங்குபடுத்தலில் பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வழங்கி வைப்பு.....

பிரித்தானியாவில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர்  ஒருவரின் நிதி அனுசரணையில், battimedia.lk   ஊடகத்தின் ஒழுங்குபடுத்தலில்  வெட்டுக்காடு மற்றும் இருதயபுரம் கிழக்கில் வெள்ள  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும்  பெண்கள் தலைமை தாங்கும் 50 குடும்பங்களுக்கு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின்  தலைமையில்  பிரதேச செயலகத்தில் வைத்து உலர் உணவுப்பொதிகள் வழங்கி வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில்  உதவி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக் அவர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில்   பகுதிகளுக்கு  பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர்கள்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர் . அத்துடன் ஆதித்தி கைத்தறி நெசவு தொழிற்சாலை நிறுவனர் கீதா சுதாகரன், ஹெல்ப் எவர் தன்னார்வ நிறுவனத்தின் பணிப்பாளர் கீர்த்தனன் மற்றும்  நிறுவன அங்கத்தவர்கள், மட்டக்களப்பின் சமூக வலைத்தள செயல்பாட்டாளர்  சஜீத்நாத் ஆகியோரும் கலந்து கொண்டு வெள்ள நிவாரனங்களை வழங்கி வைத்தனர்.










Comments