திருமலை குவாடலூப்பே திருத்தலத்தில் 9 புனிதர்களின் புனிதப்பண்டங்கள் கண்டெடுப்பு..................

 திருமலை குவாடலூப்பே திருத்தலத்தில்  9 புனிதர்களின் புனிதப்பண்டங்கள் கண்டெடுப்பு..................

திருகோணமலை குவாடலூப்பே திருத்தலத்தின் பங்குப்பணிமனை பத்து வருடங்களின் பின் மறைமாவட்டத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது. உடைந்த நிலையில் இருந்த பீடத்தைப் கவனமாக பங்குப்பணிமனையை உள்ளே கொண்டு வந்தது, கவனிப்பாரற்றுக் கிடந்த இடங்கள் தூய்மையாக்கப்படுதல் என துப்புரவுப்பணி செம்மையாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே நேற்றிரவு (03) நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருந்த பங்குப்பணிமனையின் பாதுகாப்புப் பெட்டகம் பங்குத்தந்தை அருட்பணி ஜெயரட்ணம் அடிகளார் அவர்களினால், பங்கு மக்கள் சிலரின் உதவியோடு  வெட்டித் திறக்கப்பட்டது. அப்போது தான் அந்த அதிய நிகழ்வு கண்ணுக்கு தென்பட்டது.

உள்ளே யாரும் எதிர்பாராத விதமாக 9 புனிதர்களின் புனிதப்பண்டங்கள் அடங்கிய 9 பேழைகளும், வனத்து அந்தோனியார் ஆலயத்துக்குச் சொந்தமான ஒரு தங்கச்சங்கிலியும்  கிடைக்கப் பெற்றிருக்கிறது இலங்கையில் எந்த இடத்திலும் இவ்வளவு அதிகமான புனிதர்களின் அடையாளங்கள் ஒருங்கே கிடைக்கப்படவில்லை இதுவே முதல்முறையாகும். இதில் ..............



1.புனிதர் அலோசியஸ் அவர்களி திருப்பண்டம் - யூன் 21 

2.புனிதர் டோன் பொஸ்கோ - ஜனவரி 31

3.புனித இஞ்ஞாசியார் -  யூலை 31

4.புனித பிரான்சிஸ் சேவியர் - டிசம்பர்  03

5.புனித பயஸ்  - செப்டம்பர் 03

6. புனித அந்தோணியார் - யூன் 13

7.புனித செபஸ்தியார் - ஜனவரி 20

8.புனித திரேசா - அக்டோபர் 03

9.புனித வின்சட் டி போல் - யூலை 19 

ஆகியோரின் திருப்பன்னடங்கள் இவ்வாறு எழுதப்பட்டு பெட்டியில் அடைக்கப்பட்டு கிடைக்கப்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.






Comments