கொக்கட்டிச்சோலை, மணப்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 3 பேருக்கு காயம்................

கொக்கட்டிச்சோலை, மணப்பிட்டி பிரதேசத்தில்  முச்சக்கரவண்டி விபத்தில்  2 மாணவர்கள் உட்பட 3 பேருக்கு காயம்................

மட்டக்களப்பு  கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மணப்பிட்டி தாண்டியடி பிரதான சாலையில் இன்று (08) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு  பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மணப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில்  வைத்து விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியில் பயணித்த  மட்/மமே/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தினை சேர்ந்த 2 மாணவர்கள் மற்றும்  முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக  மகிழடித்தீவு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


Comments