காத்தான்குடியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்................

 காத்தான்குடியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்................

மட்டக்களப்பு YMCA நிறுவனம் CBM நிறுவனத்தின் நிதி அனுசரணையில் காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புடன் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தை பொலீதீன் பாவனையற்ற பிரதேசமாக மாற்றும் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

காத்தான்குடி மாற்றுத்திறனாளிகளின் அமைப்பினர், மாற்றுத்திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகள் தினத்தைக் கொண்டாடியது.

பொலித்தீன் பாவனையைக் குறைக்கும் வகையில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களின் விற்பனையும் காட்சிப்படுத்தலும் இதன் போது இடம் பெற்றது.

காத்தான்குடி மாற்றுத்திறனாளிகளின் அமைப்பின் தலைவி ஏ.ஆர்.நஸ்லியா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார், காத்தான்குடி பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் பி.ராஜ்மோகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Comments