நன்னடத்தைப் பாடசாலையில் பராமரிக்கப்பட்ட சிறுவனின் உயிரிழப்பு: கைது செய்யப்பட்ட மேற்பார்வையாளர் விளக்கமறியலில்.....
நன்னடத்தைப் பாடசாலையில் பராமரிக்கப்பட்ட சிறுவனின் உயிரிழப்பு: கைது செய்யப்பட்ட மேற்பார்வையாளர் விளக்கமறியலில்.....
நன்னடத்தைப் பாடசாலையில் பராமரிக்கப்பட்ட சிறுவனின் உயிரிழப்புத் தொடர்பில், கைது செய்யப்பட்ட, அப் பாடசாலையின் மேற்பார்வையாளரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்முனை நீதிமன்றில், நன்னடத்தைப் பாடசாலை மேற்பார்வையாளர் இன்று (04) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன், சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு, வழக்கை மறு விசாரணைக்காக எதிர்வரும் 18ம் திகதி வரை ஒத்திவைத்தார்.
Comments
Post a Comment