மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்....
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்....
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் அன்மையில் யாழ்ப்பாணத்திற்கான களப்பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். இதன் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் சி.மாமாங்கராஜா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொழிற்றுறை, கால்நடை விவசாய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் சிறுதானிய உற்பத்தி செயற்றிட்டம் தொடர்பாகவும், அதனை மேம்படுத்தல், சந்தைப்படுத்தல் தொடர்பாகவும் சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment