மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் சுகயீனம் காரணமாக உயிர் இழந்துள்ளனர்.......
மட்டக்களப்பு மாவட்டம் – களுதாவளை பகுதியில் நேற்றைய தினம் மாலை சுகயீனம் காரணமாக இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே வேளை குணசேகரம் ரோஜிதன் என்ற இளைஞன் சுகயீனம் காரணமாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், களுவாஞ்சிகுடி இலங்கை வாங்கி உத்தியோகத்தரான துசாந்தன் என்ற இளைஞன் திடீர் சுகயீனம் ஏற்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Comments
Post a Comment