மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர தேசிய பாடசாலையில் 56 மாணவிகளுக்கு 9A சித்திகள்.........

 மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர தேசிய பாடசாலையில் 56 மாணவிகளுக்கு 9A சித்திகள்.........

வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 56 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குறித்த பாடசாலையிலிருந்து 176 பேர் இம்முறை பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக கல்லூரியின் அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தெரிவித்தார்.
20 மாணவிகள் 8A சித்திகளையும் 17 மாணவிகள் 7A சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வருடம் வெளியான சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி இப்பாடசாலையிலிருந்து 46 மாணவிகள் A சித்தி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments