தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு 10 ஆயிரம் பெறுமதியான காசோலை வழங்கி வைப்பு.............
தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு 10 ஆயிரம் பெறுமதியான காசோலை வழங்கி வைப்பு.............
ரணில் 24 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அண்மையில் வெளியாகிய 2022/2023 தரம் - 5ம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான புலமை பரிசில் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப் பரீட்சையில் சித்தி பெற்று பொருளாதார ரீதியில் பின்தங்கிய 100 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு தலா ஒவ்வொரு மாணவருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை பாடசாலை மட்ட மாணவர் அவை தலைவர் மோகன் டிலோசன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் சித்தியடைந்த 12 மாணவர்களுக்கு 10,000/= ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கும் நிகழ்வு கடந்த (22) திகதி பாடசாலையில் இடம்பெற்ற போது குறித்த மாணவர்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment