கிழக்கு மாகாணத்திற்கான அதிபர் சேவை - 3 இற்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு......
கிழக்கு மாகாணத்திற்கான அதிபர் சேவை - 3 இற்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வானது (06) திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கிழக்கு மாகாணத்திற்கான அதிபர் சேவை - 3 இற்கான நியமனத்தில் 499 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல வீரசிங்க, அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா, பிரதம செயலாளர் ஆர்.எம்.கே.எஸ் ரத்நாயக்க, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக்க உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment