கோறளைப்பற்று மத்தி பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.......
எதிர்வரும் பருவகால அனர்த்தங்களுக்கு எவ்வாறு தயாராதல் என்பது தொடர்பான கந்துரையாடலும், பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலாளர் எச்.எம்.முசாமில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீசா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஏ.எம்.வசீர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment