அமரத்துவமடைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிவில் சமூகம்.....

 அமரத்துவமடைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிவில் சமூகம்.....

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களாக இருந்து அமரத்துவம் அடைந்த அமரர்.அருட்தந்தை இராஜேந்திரா மற்றும் அமரர்.ச.நேசராசா ஆகியோர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு நினைவஞ்சலி நிகழ்வு (15) நடைபெற்றது.

மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் அமைப்பின் தலைவர் சி.மாமாங்கராஜா அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு அம்பாறை மறைமாவட்ட ஆண்டகை பேரருட்திரு கலாநிதி ஜோசப்பொன்னையா அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

தீபச்சுடர் ஏற்றப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அமரத்துவம் அடைந்தவர்களான அமரர்.அருட்தந்தை இராஜேந்திரா, அமரர்.ச.நேசராசா அவர்களின் ஆத்மா சாந்திக்காக மௌன அஞ்சலிப்பிரார்த்தனை இடம்பெற்றதோடு தொடர்ந்து அமைப்பின் தலைவர் திரு.சி. மாமாங்கராஜா அவர்களால் வரவேற்புரையும் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை மறைமாவட்ட ஆண்டகை பேரருட்திரு கலாநிதி ஜோசப்பொன்னையா அவர்களினால் ஆசியுரை வழங்கப்பட்டது. அதன் பின்னராக அமரத்துவம் அடைந்த அமரர் அருட்தந்தை இராஜேந்திரா அவர்களுக்கான நினைவுரையை அருட்தந்தை அ.அ.நவரெத்தினம் அடிகளாரும், அமரர் ச.நேசராசா அவர்களுக்கான நினைவுரையை சட்டத்தரணி மு.கணேசராசா அவர்களும் நிகழ்த்தினார்கள்.

 அதனை தொடர்ந்து நிகழ்வில் கலந்து சிறப்பித்த, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் வ.கனகசிங்கம், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் க.மகேசன், முன்னைநாள் அரசாங்க அதிபரான கே.விமலநாதன், முன்னைநாள் அரசாங்க அதிபரான மா.உதயகுமார், மேலதிக அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் துணைத்தலைவர் எந்திரி T.பத்மராஜா ஆகியோர் நினைவுரையாற்றினர்.

 அதன் பின்னர் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் கலாபூஷணம் எஸ்.சரவணபவான் அவர்களால் கவிதாஞ்சலி நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து சபையோரின் நினைவுப்பகிர்வு இடம்பெற்றது. அதன் பின்னர் அருட்தந்தை ஜோசப்மேரி, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜெயராஜ் ஆகியோரால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயலாளர் எந்திரி த.அன்ரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது. 


Comments