மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு......

 மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில்  சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு......

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் (03) சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் அவர்களும்,  கௌரவ விருந்தினராக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களும் கலந்த கொள்ள இந் நிகழ்வு நடைபெற்றது.

 இந்நிகழ்வில் சிறுவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்,  கலந்த கொண்ட சிறுவர்கள் முதியோருக்கு சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.








Comments