மாற்றங்கானும் மனநிலையை உருவாக்குவோம்: வறுமை குறைந்த தேசமாக தாய் நாட்டை மாற்றலாம்.....

 மாற்றங்கானும் மனநிலையை உருவாக்குவோம்: வறுமை குறைந்த தேசமாக தாய் நாட்டை மாற்றலாம்.....

சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைத் திட்டங்களில் மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகிறது.
வறுமையை குறைக்க இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல் வேறுபட்ட சமூக நலத்திட்டங்களில் சமுர்த்தி வேலைத்திட்டம் வித்தியாசமானதாகும்.
வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டுமென்பதற்காக 1994 ஆண்டு இலங்கை அரசினால் ஆய்வு செய்யப்பட்டு ஓர் இஸ்லாமியப் நாடான வங்காளதேசத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தினை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
சமுர்த்தி அபிவிருத்தித் திட்டத்தின் மூலமாக வெறுமனே நிவாரண பணிகளை மாத்திரம் மேற் கொள்ளாது குறைந்த வருமானம் பெறுவோருக்கு பல்வேறு வகையான பணிகளை அறிமுகம் செய்தது. அந்த வகையில் வறுமைக்குட்பட்ட மக்கள் தனித்திருந்து வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பதனால் இனைந்த செயற்பாடுகளை அறிமுகம் செய்தது.
1. சிறுகுழு முறை.
2. சிறுகுழுக்களை இனைத்த சங்கம்.
3. சிறிய அளவிலேனும் சேமிப்பு.
4. நிவாரண விநியோகம்.
5. வாழ்வாதார உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கள்:
இவை மானிய அடிப்படையிலும், வட்டியில்லா கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டது. வழங்கப்படும் உபகரங்களின் பெறுமதியில் அரைவாசி மானியம் மீதி அரைவாசி கடனாக
6.கொடுப்பணவு:
வறுமைக்குட்பட்ட மக்களுடைய குடும்பங்களில் ஏற்படும் திடீர் நிகழ்வுகளுக்கு தன்னிடம் இருக்கும் சிறிய முதலீட்டை அழித்து விடக்கூடாது என்பதற்காக
திரும்பக் கொடுப்பணவு, பிறப்புக் கொடுப்பணவு, நோய்க் கொடுப்பணவு, மரணக் கொடுப்பணவு, பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரில் வழங்கள், மிகவும் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கள்.
7. வீடற்றவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
இவை போன்ற பல்வேறுபட்ட உதவிகளை கடந்த 27 ஆண்டுகளாக பெற்று வரும் குடும்பங்களில் இவ்வாறு வழங்கப்படும் நிவாரணங்களில் தொடர்ந்தும் தங்கி வாழும் மனோநிலையிலிருந்து விடுபடமுடியவில்லை.
மாற்றங்கானும் மனநிலையை உருவாக்குவோம்.....
மாற்றங்கானும் மனநிலையை உருவாக்கும் நிகழ்வு இன்று (2023/01/17) சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்பூட்டல் நிகழ்வு ஓட்டமாவடி 208/C கிராம உத்தியோகத்தர் பிரிவில் காலை 9.30 மணிக்கு தாருள் குர்ஆன் மத்ரஸா கட்டிடத்தில் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.யு. ஜெஸீமா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். என்.எம்.சாஜஹான் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
பிரதான வளவாளராக பிரதேச செயலக உளவளத்துனை உத்தியோகத்தர் ஏ. ஆமினா கலந்து கொண்டு விளக்கமளித்தார். இந்நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments