மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு M.J.F. லயன்ஸ் கழக தலைவராக மா.சுதாகரன் தெரிவு.............

 மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு M.J.F.லயன்ஸ் கழக தலைவராக மா.சுதாகரன் தெரிவு.............

மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு M.J.F.லயன்ஸ் கழகத்தின் 7 வது தலைவர் தெரிவுக்கான நிகழ்வு M.J.F.லயன்ஸ் கழகத்தின் தலைவர் வை.திரவியநாத் M.J.F.தலைமையில் (08) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது .

லயன் என்.புஸ்பாகரன் M.J.F. ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், லயன்ஸ் கழக உறுப்பினர்களினால் அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

புதிய நூற்றாண்டு M.J.F.லயன்ஸ் கழக உறுப்பினர்களின் சேவை நலனை பாராட்டி சான்றிதழ்களும் நினைவு சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டதோடு,கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மட்டக்களப்பு M.J.F.லயன்ஸ் கழகத்தின் 7 வது தலைவராக மாசிலாமணி சுதாகரன் M.J.F.தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்டத்திற்கான முதலாவது பிரதி ஆளுநர் லயன் ரஞ்சித் பெர்னாண்டோ M.J.F மற்றும் லயன்ஸ் கழகங்களின் சிரேஷ்ட உறுப்பினர்கள், மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு M.J.F. லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள், லியோ கழக உறுப்பினர்கள், இலங்கை இராணுவ படை மற்றும் இலங்கை விமானப் படை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments