கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான 27வது பொது பட்டமளிப்பு விழா....

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான 27வது பொது பட்டமளிப்பு விழா....

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான 27வது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாம்நாள் நிகழ்வுகள் கடந்த (08) திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.
இப்பொது பட்டமளிப்பு விழாவில், 1760 கலாநிதி பட்டம், பட்டப்பின் படிப்பு பட்டங்கள், உள்வாரி, மற்றும் வெளிவாரி பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பட்டமளிப்பு விழாவில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமை தாங்கியதுடன் பட்டதாரிகளுக்கு பட்டங்களையும் வழங்கி வைத்துள்ளார்.
பட்டமளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்வுகள் கடந்த (07) திகதி இடம்பெற்றதுடன் இதன் போது கலாநிதிப்பட்டம், விஞ்ஞான கல்வியில் முதுமாணி, விவசாய விஞ்ஞானத்தில் முதுமாணி, கல்வியியல் முதுமாணி, கலை முதுமாணி, வியாபார நிர்வாக முதுமாணி, அபிவிருத்தி பொருளியல் முதுமாணி, முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டம் ஆகிய 55 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் நாள் நிகழ்வின்போது அதிதிகள் மற்றும் குறித்த தினத்தில் பட்டம் பெறவுள்ள மாணவர்கள் உள்ளிட்டோர் வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இரண்டாம் நாள் நிகழ்வின் முதலாவது அமர்வில் 251 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது அமர்வுகளில் முறையே 338 மற்றும் 311 இளமாணிப்பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் நாள் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை, மாலதீவு மற்றும் தென் ஆசியாவிற்கு உரித்தான உலக வங்கியின் முன்னணி பொருளியலாளரும் மனித அபிவிருத்திக்கான தலைவருமான கலாநிதி கர்ஷ அதுருபான நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், சிறப்புரை யொன்றினையும் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments