மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன............

 மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன............


மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களில் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில், மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால் வழங்கப்பட்டன.

நன்கொடையாளரான ஜெகதீசன் ஹென்றியின் நிதி பங்களிப்பில், அமரத்துவம் அடைந்த ஜோசப் நவரெட்ணம் ஹென்றி, கலிஸ்டாமேரி ஹென்றி, கசிடி பிரதீபன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக பாடசாலை அதிபர் துஸ்யந்தி ஜெயவதனன் தலைமையில் உபகரணங்கள் வழங்கப்பட்டன

நிகழ்வில் புனித ஜோசெப் வாஸ் சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்


Comments