மட்டு புதிய கண்டுபிடிப்பாளர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க புதிய கண்டு பிடிப்பு........

 மட்டு புதிய கண்டுபிடிப்பாளர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க புதிய கண்டு பிடிப்பு........



தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்

இலங்கை கண்டுபிடிப்பாளர் அமைப்பினால் வருடந்தோறும் நடைபெறும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கான போட்டியில் பங்குபற்றுவதற்காக இவ்வாண்டு மட்டக்களப்பில் இருந்து புதிய கண்டு பிடிப்பாளர்களில் ஒருவரான இளங்கோவன் மதனன் அவர்களின் மாணவிகள் வீதி விபத்தில் ஏற்படும் உயிர் இழப்புக்களை பாதுகாப்பதற்கான ஒரு புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்து அதனை இலங்கை கண்டுபிடிப்பாளர் அமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 இதன் போது, தனியாக வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் பாரிய ஒலியை ஏற்படுத்தி உதவிக்கு அழைப்பது, பாரிய விலங்குகளில் இருந்து உயிர் பாதுகாப்பிற்காக பாரிய சத்தம் எழுப்புதல், வீதிகளில் பயணம் மேற்கொள்ளும் போது அதிவேகத்தில் பயணித்தால் தானாக அதிக சத்தத்தை வாகனத்தில் ஒலி எழுப்புதல், வீதி சமிச்சைக்கு மேலதிகமாக ஹெல்மட்டில் வெளிச்சத்தை ஒளிரச்செய்தல் போன்ற விடயங்களை வெளிக் கொனர்வதற்கான கண்டு பிடிப்பை செய்துள்ளார்கள்.

எனவே இவர்களின் கண்டு பிடிப்பு வெற்றியளிக்க நாமும் வாழ்த்துவதோடு மட்டக்களப்பில் இது போன்ற கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்போம்.


Comments