ஓட்டமாவடி தியாவட்டவான் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்து.....

 ஓட்டமாவடி தியாவட்டவான் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்து.....

வாழைச்சேனை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தியாவட்டவான் பகுதியில் நாவலடியிலிருந்து ஓட்டமாவடி நோக்கி வருகை தந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி முன்னால் உள்ள உணவு கடை ஒன்றின் முன் பகுதியில் துவிச்சக்கர வண்டி மோதுண்டு அக்கடையில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள், தளபாடங்கள் சேதமாகியுள்ளன அத்தோடு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பகுதியும் சேதமாக்கப்பட்டுள்ளது. இதன் போது யாருக்கும் எவ்வித காயங்களோ ஆபத்துக்களோ ஏற்படவில்லை.

Comments