மண்முனை தென்மேற்கில் 'ரன் விமண' சமுர்த்தி வீட்டுத் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு...........

 மண்முனை தென்மேற்கில் 'ரன் விமண' சமுர்த்தி வீட்டுத் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு...........

மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முதலைக்குடா மேற்கு கிராம கிராமத்தில் 750000 ரூபா பெறுமதியான சமுர்த்தி ரன் விமண வீட்டுத் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு மண்முனை தென் மேற்குப் பிரதேச செயலாளர் தட்சணகௌரி தினேஸ் அவர்களால் (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வானது  கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கி முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  மண்முனை தென் மேற்குப் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வி.வரதராஜன், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.தியாகராஜா, சமூக அபிவிருத்தி மன்ற உதவியாளர் எஸ்.ருசகுமார் மற்றும் பிரிவு உத்தியோகத்தர்.  பி.சோதிமலர் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொணடனர்.






Comments