காத்தான்குடி மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு.....

 காத்தான்குடி மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு.....

மட்டக்களப்பு காத்தான்குடி மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நீதிபதி எச்.எம்.முகம்மது பஸீவ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கினார்.

நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி நகர சபை செயலாளர் ரிப்கா ஷபீன் காத்தான்குடி மத்தியஸ்த்த சபையின் தலைவர் மஹ்ஸூம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments