ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் புதிய சமுர்த்தி வீட்டிற்கான பணிகள் ஆரம்பம்.....

 ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் புதிய சமுர்த்தி வீட்டிற்கான பணிகள் ஆரம்பம்.....

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி பங்களிப்புடன் ஏறாவூர் நகர பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மிச்நகர் கிராமத்தில் புதிதாக சமுர்த்தி சௌபாக்கியா வீடமைப்பு வேலைத்திட்டம் (20) அன்று  இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் புதுவருடத்தை முன்னிட்டு ஏறாவூர் நகர்  பிரதேச செயலாளர்  நிஹாரா மௌஜுத் அவர்களின் தலைமையில் அடிக்கல் நடப்பட்டு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது ஏறாவூர் பிரதேச செயலகத்தின் மிச்நகர் கிராம உத்தியோகத்தர் பிரிலிருந்து  தெரிவு செய்யப்பட்ட மூன்று சமுர்த்தி பயனாளிகளின் சௌபாக்கியா வீடமைப்புக்கான வேலைத்திட்டத்தில்  மூன்று புதிய வீட்டிற்கான  அடிக்கற்களும் இன்றைய தினமே நடப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நோக்கமே வீடில்லாதோருக்கு வீடமைத்து கொடுப்பதற்கான உதவிகளை மேற்கொள்வதாகும். இதன் அடிப்படையில் மிச்நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில்  நிரந்தர வீட்டினைக் கொண்டிராத மூன்று சமுர்த்தி பயனாளிகள் இவ் வீடமைப்புத் திட்டத்தினால் பயனடையவுள்ளனர். இவர்களுக்கான ஒரு நிரந்தர வீடு அமைத்துக் கொடுக்கப்டவுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 750000 ரூபாவை சமுர்த்தி அபிவிருத்தி  திணைக்களம் மானியமாக வழங்கவுள்ளது. மிகுதி பணத்தினை  சமுர்த்தி பயனாளிகளின் நிதி பங்களிப்புடனும் ஏறாவூர் நகர் ஸகாத் நிதியத்தினதும் அனுசரணையுடன் வீடுகள் நிர்மானித்து கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டின் இறுதிப்பெறுமதி சுமார் 15 லட்சங்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்விற்கு ஏறாவூர் நகர் உதவிப்பிரதேச செயலாளர்  அல்ஹாஜ் ஏ.சீ.அகமட் அப்கர் அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர்  கி.கணேசமூர்த்தி அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர்  யு.எல்.எம்.அஸீஸ் அவர்களும், மிச்நகர் பிரிவிற்குரிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பிரிவின் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்


Comments