யாழில் துணிவுடன் கசிப்பு உற்பத்தியை முற்றுகையிட்ட பெண் கிராம சேவையாளர்...........
யாழ் மருதங்கேணி, வத்திராயன் பெண் கிராமசேவையாளர் கசிப்பு காய்ச்சும் இடத்திற்கு காவல்துறையினருடன் நேரடியாக சென்று கசிப்பு உற்பத்தியை தடை செய்துள்ளமையால் அப்பகுதி மக்கள் குறித்த கிராம சேவையாளரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
கிராம சேவையாளர்கள் என்றாலே கள்ள மண்ணுக்கு ஆதரவளித்தல், பக்கச்சார்புடன் செயற்படுதல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்க தயங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் என்று மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் தான் இருந்து வந்தது. ஆனால் வத்திராயன் கிராம உத்தியோகத்தர் பொதுமக்களுக்கும் தன் சக கிராம அலுவலர்களுக்கும் நேர்மையாகவும் தற்துணிவாகவும் செயலாற்ற வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.
Comments
Post a Comment