வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தில் புகைத்தல் எதிர்ப்பு தின நிகழ்வு .....

 வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தில் புகைத்தல் எதிர்ப்பு தின நிகழ்வு .....

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மட்டத்தில் புகைத்தலிலிருந்து மீண்ட ஒரு கிராமம் - மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம் என்ற கருப பொருளிலான கொடி விற்பனை சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம். பசீர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.ருவைத் அவர்களுக்கு முதற்கொடி சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் அவர்களால் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப், சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் ஏ.பி.ஏ. காதர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர் எச்.எம்.பைறூஸ் பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களான என்.எம்.எச்.முகம்மட் ,சீ.எம்.எஸ் இஸ்மாயில் என பலரும் கலந்து கொண்டனர்.





Comments