சிறுவர் வறுமை நிவாரண நிதியின் மூலம் வடமுனை கிராமத்தில் குடிநீர் வழங்கல்...

 சிறுவர் வறுமை  நிவாரண நிதியின் மூலம் வடமுனை கிராமத்தில் குடிநீர் வழங்கல்...

கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வடமுனை கிராமத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் முகமாக கிணறுகளை சிறுவர் வறுமை  நிவாரண நிதியம் – இலங்கை அமைப்பின் முழு நிதி அனுசரணையுடன் அமைத்துக் கொடுக்கப்படுகின்றது. இதனுடாக வடமுனை வலது கரை (RB) கிராமத்தில் 5 ஆழ்துளை கிணறுகளும், இடது கரை (LB) கிராமத்தில் 5 ஆழ்துளை கிணறுகளும் அமைத்துக் கொடுப்பதற்கான பணிகள்  28.05.2023 ஆரம்பிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் வடமுனை வலது கரை (RB) கிராமத்தில் நேரடியாக 63 குடும்பங்களும், வடமுனை இடது கரை (LB) கிராமத்தில் 62 குடும்பங்களும் நேரடியாக பயனடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இங்கு அமைக்கப்படும் ஒவ்வொரு கிணறும் 150 அடி தொடக்கம் 200 அடிகள் ஆழங்களை கொண்ட கிணறுகளாக அமையப்படவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இது போன்ற செயற்பாடு கடந்த 2022ம் ஆண்டு  ஊத்துச்சேனை கிராமத்தில் 12 ஆழ்துளை கிணறுகள் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் ஊடாக அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்க விடயமாகும், அமைத்துக் கொடுக்கப்பட்ட   அக் கிணறுகள்  மூலம்  தற்போது  மக்கள் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Comments