வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் இலவச TSP உரம் வழங்கி வைப்பு-Battieye.blogspot.com

 வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் இலவச TSP உரம் வழங்கி வைப்பு-Battieye.blogspot.com

USAID, FAO நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள இலவச TSP உரம் வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பதுர்தீன் தலைமையில் (20) இடம்பெற்றது.
குறித்த கமநல சேவைகள் நிலையத்தில் சுமார் 3626 விவசாயிகளுக்கு இலவச TSP உரம் வழங்கப்படவுள்ளதுடன் குறித்த தினத்தில் 45 விவசாயிகளுக்கு உரம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள், கமநல சேவைகள் நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் நிலைய நிர்வாக குழு தலைவர், உறுப்பினர்கள், விவசாய அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Comments