சமுர்த்தி பிரிவால் முன்பள்ளி சிறார்களுக்கு போசணை உணவு வழங்கும் நிகழ்வு-Battieye.blogspot.com

 சமுர்த்தி பிரிவால் முன்பள்ளி சிறார்களுக்கு போசணை உணவு வழங்கும் நிகழ்வு-Battieye.blogspot.com

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் தேற்றாத்தீவு தெற்கு அறிவொளி முன்பள்ளி மற்றும் பெரியகல்லாறு -01, தெற்கு சிவசுப்பிரமணியம் முன்பள்ளி ஆகியவற்றில் சிறார்களுக்கு போசணை உணவு வழங்கும் நிகழ்வு (10) திகதி   பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் அவர்களின் ஒத்துழைப்புடன் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார சிக்கலின் மத்தியில் முன்பள்ளி சிறுவர்களின் போசணை மட்டம் குறைந்த நிலையில் காணப்படுவதால் போசாக்கான உணவினை வழங்க சமுர்த்தி திணைக்களம் கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சோ.தமிழ்வாணி, மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ஆனந்தமோகன், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவீந்திரன், சமூக அபிவிருத்தி உதவியாளர் தெ.உதயசுதன், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.ஜசோபனா, வலய உதவியாளர் இ.பிறேமராஜா, கா.உதயகுமார், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.








Comments