மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு திருத்த பணிகள் ஆரம்பம்-Battieye.blogspot.com
ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வீடமைப்பு சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற மீராவோடை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஜ.ஜுமானா என்ற பயனாளியின் வீட்டு புணரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைப்பதற்கான காசோலையை ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களினால் (10)ம் திகதி வழங்கப்பட்டு திருத்த வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எல்.சியாத், சமுர்த்தி சமூக அபிவிருத்தித் உதவியாளர் எம். என்.எம்.சாஜஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment