இணைந்த கரங்களினால் முனைக்காடு சாரதா பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு...

 இணைந்த கரங்களினால் முனைக்காடு சாரதா பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு...

இணைந்த கரங்கள் அமைப்பின் பங்களிப்போடும், அனைவரின் ஆதரவோடும் மட்டக்களப்பு மண்முனை மேற்கு முனைக்காடு சாரதா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் உறவுகளால் (67) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் (36) மாணவர்களுக்கு புத்தகப்பை என்பன (14) இன்று பாடசாலையின் அதிபர் பேரின்பராசா கிருபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது அதிபர் பேரின்பராசா கிருபாகரன் பற்றி பலரும் கருத்து தெரிவிக்கையில், இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கல்வியில் பின்தங்கியவர்களாக காணப்படுகின்றனர். இப்பெற்றோர்களைப்போன்று இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும் வந்து விடக்கூடாது என்பதற்காக பாடசாலையின் அதிபர் பாடசாலை ஆரம்பித்த சில நேரங்களில் அன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்து அவர்களது கல்வி நடவடிக்கையில் ஈடுபடுத்துகின்றார் என்று பாராட்டியுள்ளார்கள்.
எனவே அதிபர் கேட்டுக் கொண்டதற்கினங்க இம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இணைந்த கரங்கள் அமைப்பு இவ்வுதவியை வழங்கியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இன் நிகழ்வில், ஆசிரியர் முத்துலிங்கம் நமசிவாயம் அவர்களும், ஆசியர்கள், பெற்றோர்கள் மற்றும் இணைந்த கரங்கள் உறுப்பினர்களாகிய லோ.கஜரூபன், எஸ்.காந்தன், சி.துலக்சன், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Comments