காகிதநகர் கிராம பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு:Battieye.blogspot.com
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் காகிதநகர் 210D கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்களினால் சேகரிக்கப்பட்ட பாடசாலை அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
காகிதநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் S.காண்டீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் V. தவராஜா அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என்.விஜிதன், பாடசாலை அதிபர்களான ஏ.பி.அலியார், எச்.எம்.எம்.இஸ்மாயில், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எல்.சியாத், ஏ.கே.எம்.சர்ஜூன் உட்பட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சுமார் 100 வறிய பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment