சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கில் மருத்துவ முகாம்:Battieye.blogspot.com

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கில்  மருத்துவ முகாம்:Battieye.blogspot.com

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர் V.வாசுதேவனின் வழிகாட்டலில்  கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இன்று (09) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாவுல் ஹக் அவர்களின் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் மற்றும் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 

மேலும் பெண்களுக்கான  உடல் ஆரோக்கியம் தொடர்பான பரிசோதனை மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள், என்பன சுகாதார சேவை நிலைய வைத்தியர்கள், தாதியர் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.






Comments