கர்ப்பிணி தாய்மார்களுக்கான உறுதிச்சீட்டுக்கள் அரசாங்க அதிபரினால் வழங்கி வைப்பு-Battieye.blogspot.com
கர்ப்பிணி தாய்மார்களுக்கான உறுதிச்சீட்டுக்கள் அரசாங்க அதிபரினால் வழங்கி வைப்பு-Battieye.blogspot.com
மட்டக்களப்பு மாவட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கான உறுதிச்சீட்டுக்கள் (voucher ) வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (09) திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்வின் போது முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் செம்மையாகவும் வினைத்திறனாகவும் தமது கடமைகளை செயற்படுத்த வேண்டும் என அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.
பெண்கள் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினுடாக தேசிய ரிதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந் நிகழ்ச்சி திட்டத்தின் பயனாளிகளுக்கான உறுதிச்சீட்டுக்கள் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தினுடாக கர்ப்பிணி தாய்மார்களின் போசாக்கு தன்மையை அதிகரிப்பதற்காக 45000 ரூபா பெறுமதியான போசாக்கு பொதி வழங்கப்படுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முன்பிள்ளைப் பருவ அபவிருத்தி தொடர்பான வேலைத்திட்டம் பற்றிய மாவட்ட இணைப்பாளரனால் வீ.முரளிதரனால் அறிக்கை செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் பதவி நிலை உதவியளாளர் எம்.எம்.றிழா மற்றும் முன்பிள்ளைப் பருவ உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment