சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவால் போதைப்பொருள் விழிப்புனர்வு தெருவோர பிரச்சார நிகழ்வு-Battieye.blogspot.com
சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவால் போதைப்பொருள் விழிப்புனர்வு தெருவோர பிரச்சார நிகழ்வு-Battieye.blogspot.com
சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவால் மாஞ்சோலை ஹிழ்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு தெருவோர பிரச்சார நிகழ்வு (14)ம்திகதி இரவு 7.00 தொடக்கம் இரவு 10.00 மணிவரை மாஞ்சோலை மையவாடி வீதியில் மாஞ்சோலை ஹிழ்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் என் சுலைமாலெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரச்சாரகர்களாக அஷ்செஹ் எம்.எஸ்.முஸம்மில் (ஸஹ்வி), அஷ்செஹ் சியாத் (ஸலபி), வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவிற்கு பொறுப்பான உத்தியோகத்தர் பண்டார, அஷ்செஹ் ஏ.எல்.பீர்முகம்மது, வைத்திய அதிகாரி DR.நஜீப்கான் அவர்களும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
குறித்த நிகழ்வு சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளருமான எம்.என்.எம்.சாஜஹான் அவர்களது நெறிப்படுத்தலில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment