போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகம்-Battieye.blogspot.com

 போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகம்-Battieye.blogspot.com

போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப்பிரசுரம் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுணதீவு பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டது. கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரி கேணல் லால் கமகெதர தலைமையில் விழிப்புணர்வு துண்டு பிரசுர விநியோகம் இடம்பெற்றது.கிழக்கு மாகாண புனர்வாழ்வு நிலையமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு (14) திகதி இடம்பெற்றது.
"போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம்" எனும் தொனிப்பொருளில் பாதசாரிகளுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், வீதியால் பயணித்த வாகனங்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இணைப்பாளர் ப.தினேஸ், மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் வி.ஜெகன், மண்முனை மேற்கு பிரதேச செயலக போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் சி.நித்தியானந்தன், ஆகியோர் பங்குபற்றியதுடன், விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.








Comments