வாகரை பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச மட்ட புதிய அங்கத்தவர் தெரிவு:Battieye.blogspot.com

 வாகரை பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச மட்ட புதிய அங்கத்தவர் தெரிவு:Battieye.blogspot.com

வாகரை பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச மட்ட அமைப்பின் 2023ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவுக்கான கூட்டமானது (07) அன்று வாகரை பிரதேச செயலாளர் ஜீ.அருணன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக  கலாச்சார மண்டபத்தில்   நடைபெற்றது.

இந்ந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் போது 2023ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன் சிறார்களின் கலை நிகழ்வும் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் கடந்த காலங்களை விட 2023ம் ஆண்டில் வாகரை சமுர்த்தி பிரதேச மட்ட அமைப்பு மிகச்சிறப்பாக  செயற்பட வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் வாகரை உதவி பிரதேச செயலாளர் ஜீ.பிரனவன்  மாவட்ட சமுர்த்தி பிரிவின் விடய முகாமையாளர் K.பகீரதன்  சமுதாய   வாகரை சமுர்த்தி தலைமையக முகாமையாளர், வங்கி சங்க முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அமைப்பின் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 













Comments