மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு:Battieye.blogspot.com

 மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு:Battieye.blogspot.com

"பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து" எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று (08) திகதி புதன்கிழமை கல்விக் கல்லூரியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக உப பீடாதிபதி நிதியும் நிர்வாக்கமும் எஸ்.என்.ஏ. அரூஸ், உப பீடாதிபதி கல்வி மற்றும் தர மேம்பாடு டபிள்யூ. மணிவண்ணன், உப பீடாதிபதி தொடறுரு கல்வி டி. சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு நிகழ்வாக விரிவுரையாளர் கே.நிதிகரன் வழிகாட்டலின் கீழ் சமூக விஞ்ஞான கற்கைநெறியைச் சேர்ந்த ஆசிரிய பயிலுனார்களால் " Stop gender based violence " எனும் கையெழுத்து சஞ்சிகை பீடாதிபதி த.கணேசரத்தினம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் நாடகமாக இணைய வழி வன்முறை, இணைய வழி வன்முறையை நிறுத்து, இணையத்தின் ஊடாக பெண்களை நகைக்காதே என்ற தொனிப் பொருளில் நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது.
இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுணர்களால் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான விழிப்புணர்வு நாடகம், கவிதை, உணர்வுபூர்வமான தாய்மையின் பாடல், என்பன நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.





Comments