“மக்கள் பலம் - பலமான அதிகாரத்திற்கு”சமுர்த்தி தேசிய சிரமதான வேலைத்திட்டம் - 2023

 “மக்கள் பலம் - பலமான அதிகாரத்திற்கு”சமுர்த்தி தேசிய சிரமதான வேலைத்திட்டம் - 2023

நீண்டகால பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான அபிவிருத்தியொன்றினை அடைந்து கொள்ளும் பொருட்டு தேவையான சிறந்த சூழலினை ஏற்படுத்துவதனை குறிக்கோளாக கொண்டு தேசிய ரீதியில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களினுடாக முன்னெடுக்கும் சிரமதான அங்குராப்பன வேலைத்திட்டம் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
இன் நிகழ்வானது ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் கொம்மாதுறை வடக்கு, கிழக்கு பொது மக்களினால் (25) கொம்மாதுறை சனசமூக நிலைய வளாகத்தில் இடம் பெற்றது இன் நிகழ்விற்கு சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் S. இராசலிங்கம், பிரிவு கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.








Comments